Advertisement

Responsive Advertisement

அண்மையில் காலமான கலாபூசணம் மர்ஹூம் யூ.எல். ஆதம்பாவாவுக்கு அம்பாறை கலைஞர்கள் நடாத்திய இரங்கற்பா நிகழ்வு !



நூருள் ஹுதா உமர். 

அண்மையில் காலமான மூத்த இலக்கியவாதி, ஆசிரியர் கலாபூசணம் யூ.எல். ஆதம்பாவா அவர்களுக்கான இரங்கற்பா நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம். றிம்ஸான், ஓய்வுபெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் மருதூர் ஏ மஜீத்,  சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.அஷ்ரப், கவிஞர் (ஆசிரியர்) விஜிலி, பாவேந்தர் பாலமுனை பாறுக், கவிதாயினி அனார், ஆகியோர் இரங்கற்பா நிகழ்த்தினர்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள இலக்கியவாதிகள், இலக்கிய அமைப்புக்களின் பிரதானிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

Post a Comment

0 Comments