Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு புதிய அதிபர் பொறுப்பேற்பு

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய அதிபராக எம்.சி. ஜுனைட் நேற்று புதன்கிழமை 10.06.2020 ம் திகதி கடமைப் பொறுப்பேற்றார்.

இக்கலாசாலையில் இதுவரை அதிபராக இருந்த வி. பரமேஸ்வரன் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து புதிய அதிபராக எம்.சி. ஜுனைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

 மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் புதன்கிழமை இடம்பெற்ற பதியேற்பு மற்றும் பதவி கையளிப்பு நிகழ்வில் கலாசாலையின் புதிய அதிபர் ஜுனைட், முன்னாள் அதிபர் வி. பரமேஸ்வரன் உட்பட கலாசாலை பிரதி அதிபர், வுரவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

புதிய அதிபர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு – தாழங்குடா கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியாகவும் அக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமை புரிந்துள்ளார்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 01.09.1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பதவியேற்றுள்ள ஜுனைட் அக்கலாசாலையின் 22வது அதிபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments