Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் கருணாவிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர்.
அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துண்டுப்பிரசுரங்களை வழங்கும் பணி பாண்டிருப்பு சந்தை தாளவட்டுவான் சந்தி நீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

Post a Comment

0 Comments