Home » » காத்தான்குடியில் தீ விபத்து- 2 கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

காத்தான்குடியில் தீ விபத்து- 2 கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

காத்தான்குடி திண்மைக் கழிவு முகாமை  செய்யும் இடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் திண்ம கழிவு தரம் பிரிக்கும் 2 கோடி ரூபாய் பெறுமதியான இயந்திரம் தீயில் கருகியுள்ளது.

தீ பரவல் ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தீயணைப்பு பணியில் விரைந்து செயற்பட்டதுடன், காத்தான்குடி நகரசபையினர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்கள் இரண்டு கோடி ரூபாய் பெறுமதிமிக்க இயந்திரம் தீயில் கருகியுள்ளதாகவும், இவ் திண்மைக் கழிவு முகாமை செய்யும் இடத்தில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் புதிய செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 

தற்போது எமது நகர சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விபத்தில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தினை காத்தான்குடி பொலிஸார் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |