Home » » மட்டக்களப்பு வாழைச்சேனையில் பல இடங்களில் மணல் திருட்டு!- நால்வர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பல இடங்களில் மணல் திருட்டு!- நால்வர் கைது!

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த கைது நடவடிக்கைகள்  இடம்பெற்றதுடன் மணல் அகழும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.


பொண்டுகள்சேனை மற்றும் மீராவோடை வெம்பு ஆகிய இருவேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மணல் ஏற்றி வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |