Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

நேற்று மதியம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கமைய பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சமூக இடைவெளியை கல்வி துறையில் மேலும் வளர்ச்சி செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என இதன் போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகங்களை நிறைவு செய்து சமூகத்திற்கு செல்லும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில் தேடிக் கொள்ளும் வகையில் உயர் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments