Home » » அமெரிக்காவில் கொரோனாவுக்கான மருந்து தயார் : கிடைத்தது அனுமதி

அமெரிக்காவில் கொரோனாவுக்கான மருந்து தயார் : கிடைத்தது அனுமதி

அமெரிக்காவின் ஜிலீட் சயன்ஸஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவைர்’ (remdesivir) மருந்தை கொரோனா அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கழகமான யு.எஸ்.எஃப்.டி.ஏ அனுமதி அளித்துள்ளது.
அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இதனைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தைப் பயன்படுத்தும் உரிய காலஅளவு குறித்து அதாவது எத்தனை நாட்களுக்கு இதனைக் கொடுக்கலாம் என்பது தற்போது நடைபெற்றுவரும் கிளினிக்கல் ஆய்வுகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அவசரகால சிகிச்சைக்காக கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து 5 நாள் முதல் 10 நாட்கள் வரையிலான கால அளவில் ரெம்டெசிவைர் கொடுக்கலாம் என்று தற்போது அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி தற்காலிகமானதே என்று ஜிலீட் சயன்சஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அரசுடன் ஜிலீட் நிறுவனம் இந்த மருந்தை பிறநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறை பற்றி விவாதித்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |