Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று அமுலாகவுள்ள ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுவந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
தற்போது கொரோனா அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுலாகும் என்பபோது தொடர்ந்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments