Home » » மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்னின் சடலத்தை இன்று சனிக்கிழமை காலை பொலீஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கருவப்பங்கேணி அம்புறுஸ் வீதி புகையிரதப் பாதைக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலிருந்தே இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் அறையொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலமானது உதயகுமார் நித்தியா (வயது 18 ) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருமணமான இவரின் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண விசாரணைகளைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |