Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்


அம்பாறையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு கடமைக்கு சென்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சிலர் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தலைமைறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் கல்முனைக்குடி 02 , 04ம் பிரிவுகளில் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது சிலரால் தாக்கப்பட்டு சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இருவர் பாழடைந்த மண்டபம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கல்முனை பகுதியை சேர்ந்த 30, 45 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments