Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கனேடிய அவசர சிகிச்சை மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெண்டிலேட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தேவைப்படும் சில மருந்துகளை வேறு எதற்கும் பயன்படுத்தவேண்டாம் என கனேடிய அவசர சிகிச்சை மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைப்பதற்கு propofol போன்ற மயக்க மருந்தும், fentanyl மற்றும் morphine போன்ற வலி நிவாரணிகளும் தேவை.

ஆகவே, இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஒரு வாய்ப்பு உள்ளதால், அவற்றை கவனமாக கையாளுமாறு அவசர சிகிச்சை மருத்துவர்களுக்கு கனேடிய அவசர சிகிச்சை மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அறுவை சிகிச்சை அறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வழக்கமாக பயன்படுத்தப்படுவதுடன், இந்த குறிப்பிட்ட மருந்துகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.


இந்த நேரத்தில் அவசர சிகிச்சை மருத்துவர்கள் இந்த மருந்துகளை சற்று அதிக பொறுப்புடன் கையாளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட மருத்துகளுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு இருப்பதாக கனடா சுகாதாரத்துறைக்கு ஏற்கனவே தகவலளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரும் வாரங்களில் இந்த மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் என கனேடிய அவசர சிகிச்சை மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments