Home » » கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் தனியான மையவாடி அமைத்து புதைக்க அனுமதிக்க வேண்டும் : ஏ. எல். எம். அதாவுல்லா.

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் தனியான மையவாடி அமைத்து புதைக்க அனுமதிக்க வேண்டும் : ஏ. எல். எம். அதாவுல்லா.


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை தனியான மையவாடி ஒன்றை அமைத்து புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா யோசனை முன்வைத்துள்ளார்.ஆளும் கட்சி கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கொரோனா தொற்றினால்  உயிரிழக்கும்  முஸ்லிம்கள்  புதைக்கப்பட தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளதாக  அறிய  வருகிறது. 

ஒவ்வொரு மாவட்டங்களிலும் மண்ணின் தன்மை தொடர்பாக ஆராய்ந்து நிபுணத்துவ அறிவுரை வேலை பெற்று இந்தப் பிரச்சினைக்கு சாதகமான முடிவுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக அறியவருகிறது. ஆனால் அவரின் யோசனை தொடர்பில் சாதகமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.இலங்கை மத நம்பிக்கையுள்ள நாடு. எனவே கொரோனா தொற்று தொடர்பில் மத ஸ்தலங்களில் பிரார்த்தனைகள் புரிவதற்கு இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்,கொரோனா தொற்றினால்  இறப்பவர்களை அவர்களது மத நம்பிக்கைப் பிரகாரம் புதைப்பதற்கும்  அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

உயிரிழக்கும் நபர்களை  தகனம் செய்யவோ புதைக்கவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதே கருத்தை வெளியிட்டிருப்பது தொடர்பிலும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா தொற்றினால் உயிரிழக்கும்  நபர்களை புதைப்பதற்கு வேறு நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டது தொடர்பிலும் அவர் இங்கு விளக்கியதாக அறிய வருகிறது. ஆனால் நாட்டில் ஒரு சட்டமே முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் பிரகாரம் தகனம் செய்ய மட்டுமே அனுமதி  உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பதில் அளித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |