Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு தளர்வின்போது திறந்திருந்த வர்த்தக நிலையங்கள் - மாநகர முதல்வரின் அதிரடி

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது அறிவிப்புகளை மீறிய வர்த்தக நிலையங்கள் மாநகர முதல்வரினால் நேரில் சென்று மூடப்பட்டன.

ஊரடங்கு தளர்த்தப்படும்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குள் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறக்கப்படவேண்டும் என்று மாநகரசபை மற்றும் மாவட்ட கொரணா ஒழிப்பு செயலணியினால் அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதனை மீறும் வகையில் ஆடை விற்பனை உட்பட சில அத்தியாவசிய பொருட்கள் இல்லாத விற்பனை நிலையங்கள் இரகசியமான முறையில் விற்பனையில் ஈடுபட்டுவந்தன.

அதனை தொடர்ந்து அவ்வாறான விற்பனை நிலையங்களை கண்டறிந்து அவற்றினை மூடுவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் மேற்கொண்டதுடன் அவர்களுக்கு எச்சரிக்கையினையும் வழங்கினார்.

மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கிவரும் நிலையில் இவ்வாறு செயற்படும் வர்த்தகர்களினால் கொரனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என மாநகர முதல்வர் தெரிவித்தார்.





Post a Comment

0 Comments