Home » » இரட்டைக் கோபுர தாக்குதலின் பலி எண்ணிக்கையையும் கடந்தது அமெரிக்கா!

இரட்டைக் கோபுர தாக்குதலின் பலி எண்ணிக்கையையும் கடந்தது அமெரிக்கா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மற்றொரு மையப்புள்ளியாக தற்போது அமெரிக்கா மாறியிருக்கிறது. அந்நாட்டில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்துவரும் 30 நாட்கள் கடுமையானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளதுடன், சுய தனிமையை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியிருக்கும் அவர், அமெரிக்காவில் மட்டும் 2 லட்சம் பேரினை இழக்க நேரிடும் என்று எச்சரித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 3,899 ஆக அதிகரித்துள்ளது. இது 9/11 இரட்டைக் கோபுரத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2,977, தற்போது கொரோனா பலி எண்ணிக்கை அதையும் கடந்தது.
இது தொடர்பில் பேசியுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இது மிகவும் வலிநிறைந்த, மிக மிக வலிநிறைந்த 2 வாரக் காலக்கட்டமாகும்” என்று கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், அமெரிக்க மருத்துவ நிபுணர்களான ஆண்டனி ஃபாசி, மற்றும் டெபோரா பர்க்ஸ் ஆகியோர் அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதவாக்கில் கணக்கிட்டால் பலி எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்று அச்சம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |