இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் இலங்கையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 198ஆக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 54 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments