Home » » இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தினை விரைவில் கட்டுப்படுத்த முடியாது! சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தினை விரைவில் கட்டுப்படுத்த முடியாது! சுகாதார அமைச்சர் எச்சரிக்கை


எதிர்வரும் 19ஆம் திகதியின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்த நாடாக இலங்கை மாறும் என தான் கூறவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
“நாட்டை திறப்பது பற்றியோ இல்லை என்றால் ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் நோய் முழுமையாக ஒழிந்து விடும் என்ற தகவலை நான் கூறவில்லை.
பொதுவாக நோயில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் அறிகுறிகள் முழுமையாக கண்டுபிடிக்க 14 நாட்கள் வரை செல்லும். 30 நாட்கள் செல்லும் போது அறிகுறிகள் கண்டுபிடிக்கும் நாட்களின் இரண்டு மடங்காகும். எனவே நோயாளிகளை குறித்த நாட்களுக்குள் கண்டுபிடித்து விடலாம் என்றே நான் கூறினேன்.
விமான நிலையங்களை மூடினோம். நாட்டில் பாரிய அளவிலானோரை தனிமைப்படுத்தினோம். அதேபோன்று நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே 30 நாட்களுக்குள் நோயாளிகளை அடையாளம் காண முடியும் என்று மாத்திரமே கூறினேன்.
கடவுள் புண்ணியத்தில் 30 நாட்களுக்கு இந்த நோயாளிகள் இருந்தால் கண்டுபிடித்து விடலாம். போதியளவு மருத்துவ பரிசோதனை பொருட்கள் இலங்கைக்கு கெண்டு வரப்பட்டுள்ளன.
இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாங்கள் பரிசோதனைகளை அதிகரிப்போம். அதற்காக இந்த நோய் முற்றிலும் ஒழிந்து விடும் என கூற முடியாது. ஓரிரு நோயாளிகள் பதிவாகுவதற்கு வாய்ப்புகள் இல்லை. நாம் தொடர்ந்தும் அவதானத்துடனும் ஒரு மீற்றர் தூரத்தில் பயணித்தாலே நோயை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |