Home » » அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட  கொரோனா தொற்று தொடர்பில்   அடையாளப்படுத்த நபர்கள்  தொடர்பாக வெளிவந்த செய்தி  தொடர்பாக வியாழக்கிழமை(23)  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில்  கொரோனா வைரஸ் என அடையாளப்படுத்தப்பட்ட  சந்தேக நபர்கள் இருவர் சிகிச்சைகளுக்காக பொலநறுவை வெலிகந்த  ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இதில்  ஆண் இரண்டு கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வுகளின் மாதிரி  அறிக்கைகள்  வெளிவந்துள்ளன.இதில் ஆணிற்கு  நெகட்டிவாக அறிக்கையாக  வந்திருக்கின்றது பின்னர் இரண்டு நாட்களின் பின் அந்த  ஆய்வுகள் திரும்பவும் செய்யப்பட்டு   அவர் குணம் அடைந்து விட்டார் என்ற அடிப்படையில் வீடு செல்ல  அனுமதிக்கப்படுவார்.பின்னர் அவர் வீட்டில் இரு கிழமைக்கு தனிமைப்படுத்தப்படுவார்.அதே போன்று குறித்த ஆணின் மனைவியாரும் இவ்வாறு முடிவுகள் வரும் பட்சத்தில் இவ்வாறு தான் அவருக்கும் அந்த நிலைமை ஏற்படும்.இவர்களுடன் தொடர்புடைய 80 பேர் பொலநறுவை தமின்ன பகுதிக்கு சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றோம்.

இவ்வாறான நெகடிப் பெறுபேறுகள் கிடைக்கின்ற போது நாமும் பெரும் மகிழ்ச்சி அடைவோம்.இது தவிர அக்கரைப்பற்று 19  பகுதி தனிமைப்படுத்தல் சூழ்நிலையை தற்போது எதிர்கொண்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் இத்தடையினை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.
-- 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |