Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கங்கையில் மிதந்த ஆணின் சடலம்! உடனடியாக விரைந்த பொலிஸார்

மஹலதுவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அஹூங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மஹலதுவ பகுதியை ஊடறுத்து செல்லும் மாது கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்ததை அவதானித்த விடுதி ஒன்றின் முகாமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 41 வயதுடைய பலபிட்டி பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அஹுங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments