Home » » மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய வடமாகாண கொரோனா வைத்தியசாலை?

மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய வடமாகாண கொரோனா வைத்தியசாலை?

வட மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மாகாணத்திற்கென ஒரு கொரோனா வைத்தியசாலையினை உருவாக்கும் வகையில் வட மாகாண கொரோன வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும். தகவல் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து அக்கராயன் வைத்தியசாலையில் இடம்பெற்ற வைத்திய சேவைகளில் சிலவற்றை ஸ்கந்தபுரம் ஆயுள்வேத மற்றும் பொது கட்டடங்களுக்கு மாற்றுமாறும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவனை தொடர்பு கொண்டு வினவிய போது,
இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், எனவே தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது விடயம் தொடர்பில் மாகாண சுகாதார திணைக்களத்துடன் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.
அக்கராயன் பிரதேச வைத்தியசாலையானது 15 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு சேவை வழங்குகின்ற ஒரு பிரதேச வைத்திசாலை எனவும், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் இந்த வைத்தியசாலையினை நம்பி வாழ்கின்ற பொது மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் இன்றி குறித்த வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக தெரிவு செய்யப்பட்டமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |