அபு ஹின்சா
கொறோணா தொற்றுநோய் மற்றும் அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் 5000 ரூபா வழங்க அரசு தீர்மாணித்துள்ள நிலையில் அவ் வேலைத்திட்டத்தினை பாரபட்சம் இன்றி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுப்பதற்கு அரசு திட்டம் வகுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகுமென முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட்19 கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு முழு உலகமும் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசீல் ராஜபக்ஷ ஆகியாரின் வழிகாட்டலில் எடுத்துவரும் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அதேவேளை ஊரடங்கு சட்டம் காரணமான தமது தொழில்களை இழந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ள நாளாந்த கூலி தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், என தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் வழங்கிவருகிறது.
அந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வீடு சென்று குறித்த பண தொகையினை வழங்க அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு இந்த உதவு தொகையை தொழில் பாதிப்புற்ற அனைவருக்கும் வீடு தேடிச் சென்று வழங்க முன்வந்திருப்பது மக்கள் நலன் சார்ந்த அரசின் விஷேட செயல்திட்டமாகும் என மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments