Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் பட்டதாரிகளை இணைக்கத் தீர்மானம்

வேலையில்லாத பட்டதாரிகளை, ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பிலான நடவடிக்கை, ஊனமுற்றோர், ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள், கொரோனா தொற்று காரணமாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பிலான சுற்றுநிரூபம் நேற்று (31) வௌியிடப்பட்டதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கான வேலைப்பளு அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments