Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்? பொலிஸார் தகவல்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு பரவுவதற்கு 19 பேரே காரணமாக இருந்தார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாது கொரோனா நோயாளியான சுற்றுலா வழிக்காட்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதகர் உட்பட 19 பேரால் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்த கொரோனா பரவல் காரணமாக 60 மற்றும் 70 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஓய்வூதியம் பெற செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ATM இயந்திரம் ஊடாக பணம் பெறுபவர்கள் பணம் பெற்ற பின்னர் கைகளை கழுவுதல் என்பது மிக முக்கியமாக விடயமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments