Home » » உலக வரலாற்றில் அமெரிக்காவுக்கு இப்படியொரு நிலையா? அடுத்து வரவிருக்கும் பெரும் சிக்கல்கள்

உலக வரலாற்றில் அமெரிக்காவுக்கு இப்படியொரு நிலையா? அடுத்து வரவிருக்கும் பெரும் சிக்கல்கள்

உலக வல்லரசான அமெரிக்காவை தற்போது ஆட்டம் காணச் செய்திருக்கிறதுகொரோனா வைரஸ். தற்போதுவரை அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14,795 ஆக உயர்ந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 435,128 தொட்டிருக்கிறது.
இது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில், கொரோனாவால் அங்கு 2 லட்சம் பேர் பலியாகக் கூடும் என ஏற்கனவே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2, 40,000 வரை இருக்கலாம் என்ற அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க தொழிலாளர் துறை சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் இதுவரை வேலையிழந்துள்ளனர், இது பலதுறைகளையும் சேர்த்து என்றும் இப்படியே போனால் 2 மாதங்களில் 4 கோடி பேர் வேலையிழக்கலாம் என்றும் 2009 பொருளாதார நெருக்கடியை விட மோசமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை தரவுகளின் படி பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பாந்தியன் மேக்ரோ இகனாமிக்ஸ் ஆலோசனை நிறுவனம் கூறும்போது, “இப்படிப்பட்ட பயங்கரத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளது.
மேலும் 50 லட்சம் பேர் வேலையின்மையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடுகள் கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
கடந்த வாரம் வெளியான அறிக்கைகளின்படி 66 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது, மார்ச் 26 அறிக்கையிலேயே 33 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
பரவலான லொக்-டவுன் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் மார்ச் 12ம் தேதி வாக்கிலேயே 7 லட்சம் பேர் வேலையைப் பறித்துள்ளது. ஏப்ரலில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது, தற்போது வேலையின்மை விகிதம் 15% ஆக உள்ளது.
வேலையின்மையினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அமெரிக்க காங்கிரஸ் 2.2 ட்ரில்லியன் டொலர்கள் தொகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது நடைபெறும். வேலையின்மை காப்பீடு 350 பில்லியன் டொலர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இரட்டைக் கோபுர் தாக்குதல்களின் போது ஏற்பட்ட இழப்புக்களை விடவும் கொரோனாவில் ஏற்பட்ட தாக்கம் பன்மடங்காக உயர்ந்திருக்கும் நிலையில், தற்போது பொருாளதாரம் மற்றும் வேலை வாய்ப்பு இழப்ப மனித சக்தியின் இழப்பு என்று அமெரிக்காவை பெரும் நெருக்கடிக்குள் கொரோனா தள்ளிவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |