Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று: உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதற்கிடையே, இன்று மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் 13 லட்சத்து 62 ஆயிரத்து 687 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 47 ஆயிரத்து 672 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments