Home » » அமெரிக்காவுக்கு விழுந்த அடி? 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி காணுமாம்!

அமெரிக்காவுக்கு விழுந்த அடி? 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி காணுமாம்!

உலகின் மிகப் பெரிய மற்றும் வலுவான பொருளாதாரமான அமெரிக்க பொருளாதாரமே, கொரோனா வைரஸால் சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கிறது.
தற்போது அமெரிக்காவில் தான் அதிகம் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. மொத்தம் 277,522 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சுமார் 7,403 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க அரசே இந்த வைரஸை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.
இதற்கு மத்தியில் அமெரிக்க பொருளாதாரம் வேறு அடி வாங்கும் என பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாதிப்புகள்..
அமெரிக்க பொருளாதாரம் இந்த மார்ச் 2020 காலாண்டில் (2020-ம் ஆண்டின் முதல் காலாண்டு) சுமாராக 3.4 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருக்கிறது மார்கன் ஸ்டான்லி.
அத்தோடு ஜூன் 2020 காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் சுமார் 38 சதவிகிதம் சரியலாம் என்கிறது மார்கன் ஸ்டான்லி.
இந்த ஒட்டு மொத்த 2020-ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் சுமாராக 5.5 சதவிகிதம் சரியலாம் எனவும் கணித்து இருக்கிறது மார்கன் ஸ்டான்லி நிறுவனம்.
இந்த 5.5 % சரிவு என்பது, அமெரிக்க பொருளாதார வரலாற்றில் 1946-ம் ஆண்டுக்குப் பின் காணும் மிகப் பெரிய வீழ்ச்சியாம்.
உலக வங்கியின் தரவுகள் படி, கடந்த 2009 பொருளாதார நெருக்கடி காலத்தில் கூட, அமெரிக்க பொருளாதாரம் (ஜிடிபி) 2.5 சதவிகிதம் தான் வீழ்ச்சி கண்டது.
ஆனால் இப்போது 5.5 சதவிகிதம் வீழ்ச்சி காண்கிறது என்பது யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.
1946-க்குப் பின் மிகப் பெரிய வீழ்ச்சி என்றால் 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |