ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 737 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொரோனா சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ய விரும்புவோர் இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை 0112354479 அல்லது 0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: