இருபது ஆண்டுகளுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் சரத் பிரேமசிறி இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், வளிமண்டலத்தில் தூசி துகளின் அளவு குறைவடைவதைக் காட்டுவதுடன், காற்று மாசுறும் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அந்த வகையில், தற்போது காற்றுமாசு அளவின்படி அதன் எண்ணிக்கை 30 மற்றும் 20 புள்ளிகளுக்கு இடையில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments