Home » » 15 வருடங்களாக மிக கொடிய வைரஸ்கள் சோதனை : வுஹானின் ஆய்வுகூடம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

15 வருடங்களாக மிக கொடிய வைரஸ்கள் சோதனை : வுஹானின் ஆய்வுகூடம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

கொரோனா வைரஸை உருவாக்கியதாக கூறப்படும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி 1956ல் தொடங்கப்பட்டது. முதலில் வுஹான் மைக்ரோபயாலஜி லேப் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அதன்பின் 1962ல் இந்த ஆராய்ச்சி மையம் விரிவுபடுத்தப்பட்டது.
1970ல் பல்வேறு வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளை செய்ய தொடங்கியது. அதன் பின்தான் இந்த வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த ஆராய்ச்சி மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது.
அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உதவும் வகையில் முக்கியமான வைரஸ் ஆராய்ச்சிகளை இந்த மையம் செய்து இருக்கிறது.

முக்கியமான, மிக தீவிரமான வைரஸ் குறித்தும் இந்த ஆராய்ச்சி மையம் சோதனை செய்துள்ளது.
1500 வகையான வைரஸ் ஆசியாவில் அதிகமான வைரஸ்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஒரே ஆராய்ச்சி மையம் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மையம்தான்.
இங்கு மொத்தம் 1500 வகையான வைரஸ்கள் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதை வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் இணைய பக்கமே. இதை குறிப்பிட்டுள்ளது.
“நாங்கள் 1500 வகையான வைரஸ்களை சோதனை செய்கிறோம்” என்று கூறியுள்ளது.
ஆசியாவிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட, காற்று கூட வெளியேற முடியாத மிக அதிக சக்தி வாய்ந்த சோதனை கூடம் பி4 (Class 4 pathogens) சோதனை கூடம்தான்.
இங்குதான் உலகின் மிக மோசமான வைரஸ்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இங்கு எபோலா தொடங்கி நிப்பா வைரஸ் வரை சோதனை செய்யப்பட்டு வருகிறது.
2004ல் சார்ஸ் உருவாக காரணமான கொரோனா குடும்பத்து வைரஸ்களை இங்கு வைத்துதான் சோதனை செய்தனர்.
கொரோனா வைரஸ் குடும்பம் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மிக பாதுகாப்பாக வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறது.
அதிலும் கடந்த 3 வருடங்களில் மிக முக்கியமான ஆராய்ச்சி முடிவுகள், ஆய்வு கட்டுரைகளை இந்த வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனம் வெளியிட்டது.
இங்கு வௌவால்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. வௌவால் சோதனை உலகில் இருக்கும் பல்வேறு வகையான வௌவால்கள் இங்கு தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
வௌவால்களில் இருக்கும் பல டேஞ்சரான வைரஸ்கள் குறித்து இங்கு மிக தீவிரமான சோதனைகளை அந்நாட்டு வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மையம் செய்துள்ளது.
நமது உடலில் வைரஸ் கிருமிகளால் தாக்கவே முடியாத செல்களை கூட தாக்கும் வகையில் இங்கு சில செயற்கையான வைரஸ்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, 2018ல் இந்த வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி பாதுகாப்பானதாக இல்லை.இங்கிருந்து வைரஸ் கிருமிகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது.
ஆனால் அப்போதே இந்த புகாரை சீனா மறுத்து இருந்தது. ஆனால் தற்போது அங்கிருந்து கொரோனா வைரஸ் லீக்காகி இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா புகார் அளிக்க தொடங்கி உள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |