Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தையில் 1400 பேர் கட்டாய தனிமைப்படுத்தலில்


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருதானையை சேர்ந்த நபரின் மருமகன், கொழும்பு றோயல் மற்றும் கல்கிஸ்சை புனித தோமா கல்லூரிகளுக்கு இடையில் பிக் மெச் கிரிக்கெட் போட்டியை காண சென்றிருந்தமை தெரியவந்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள தொடர் மாடி வீடடில் வசித்து வந்த கொரோனாவில் உயிரிழந்த நபரின் மகளுக்கும் கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த நபர், மருதானை இமாமுல் அரூஸ் வீதியில் உள்ள வீட்டில் 10 நாட்கள் இருந்துள்ளார். இதன் காரணமாக அந்த தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் உள்ள 10 தொடர்மாடி வீடுகளில் வசிக்கும் ஆயிரத்து 400 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ருவான் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments