Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய நபருக்கு கொரோனா அறிகுறி! விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்

இத்தாலியிலிருந்து வருகைத் தந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி இத்தாலியிலிருந்து நாடு திரும்பியதாகவும் இவர் சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
19ஆம் திகதி இரவு 37 வயதுடைய குறித்த நபருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவரது உறவினர்களால் சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார ஆய்வாளர்கள், மாரவில ஆரம்ப வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டியில் பாதுகாப்பான முறையில் குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments