Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுவிஸ் போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் காப்பாற்றியது யார்? – ஆளுநர் தகவல்

சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார்.

யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே.

மேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அச்சுறுத்தியமை தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இதனடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments