Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஹற்றனில் ஹொங்கொங் பிரஜைகள் தங்கியிருந்த விடுதிக்கு சீல் வைப்பு


ஹற்றன் பிரதேசத்தில் ஹொங்கொங் நாட்டவர் இரண்டு பேர் தங்கியிருந்த சுற்றுலா விடுதியை முத்திரை இட்டு மூட ஹற்றன் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த ஹொங்கொங் நாட்டவர்கள் சில தினங்களுக்கு முன்னர் ஹற்றனுக்கு சென்று இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலா விடுதியின் உரிமையாளர் ஹற்றன் பொலிஸ் மற்றும் பொது சுகாதார பிரிவினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஹொங்கொங் பிரஜைகள், விடுதி உரிமையாளரின் காரிலேயே நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றுலா விடுதியின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுதிக்கு கீழ் மாடியில் குடியிருந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களை இன்று முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதி உரிமையாளரின் வாகனத்தையும் 14 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments