Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுதாவளையில் சொகுசு பஸ் விபத்து - மூவர் படுகாயம் களுதாவளையில் சொகுசு பஸ் விபத்து -மூவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிச்சென்ற சொகுசு பஸ் களுதாவளை கலாசார மண்டபத்திற்கு அருகிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவரை மோதி குறித்த பஸ் மின்கம்பத்தினையும் உடைத்துகொண்டு மதிலில் மோதியுள்ளது.

இந்த விபத்து காரணமாக வீதியால் சென்ற மீன் வியாபாரி,பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துக்காரணமாக களுதாவளை பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




















Post a Comment

0 Comments