Home » » சம்பிக்கவின் கருத்தை வண்மையாக கண்டிக்கிறேன் : முஸ்லிம் தலைமைகளின் ஒற்றுமை இக்காலகட்டத்தில் அவசியம் - பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

சம்பிக்கவின் கருத்தை வண்மையாக கண்டிக்கிறேன் : முஸ்லிம் தலைமைகளின் ஒற்றுமை இக்காலகட்டத்தில் அவசியம் - பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்



மாளிகைக்காடு நிருபர் நூருல் ஹுதா உமர் 

புர்கா, மதரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார். இந்த அரசு பெரும்பான்மை மக்களிடம் மதம் தொடர்பிலான பீதியை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தது. எதிர்கட்சியில் இருந்த போது பீதியை ஏற்படுத்திய புர்கா மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்ய தற்போது பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற  குழு யோசனைகளை முன்வைத்துள்ள்ளது .முடியுமானால் அதை இந்த அரசு நிறைவேற்றிக் காட்டட்டும் என்று சவாலும்  விடுத்துள்ளார். 

இது சம்பந்தமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார். அக்கண்டன அறிக்கையில்,

கடந்த  ஐக்கிய தேசிய முன்னணி அரசில் முக்கிய அமைச்சர் பதவியை வகித்திருந்த முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க அவர்கள் மீண்டும் தனது இனவாத முகத்தை காட்ட ஆரம்பித்திருப்பது மிகவும் ஆபத்தானது. அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த நாட்டு மக்களை மோசமான முறையில் வழிநடத்த எத்தனித்திருப்பது கண்டிக்க கூடியதாகும். 

இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் தனது மொழி, கலாச்சாரம், பண்பாடு, மதம் என்பவற்றை பின்பற்ற இலங்கை அரசியலமைப்பு இடம் வழங்கியிருக்கின்றது. அதை மறுக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை. எமது நாட்டில் வாழும்  சகலரும் நிம்மதியாக வாழும் படியாகவே எமது நாட்டின் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்கமுடியாது. 

புர்கா, மதரஸா உள்ளிட்டவைகளை தடை செய்ய தேவையான ஆதரவை பாராளுமன்றத்தில் பெற்றுத்தர நான் தயார் எனவும் அவரது கருத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கைகளின் பிரகாரம் தனது சொந்த முகங்களை காட்ட ஆரம்பித்திருப்பதானது இந்த நாட்டில் வாழும் மக்களின் தனிப்பட்ட இறைமையின் தலையில் கை வைப்பது போன்றதாகும். 

இனவாத குரல்கள் அதிகமாக எமது முஸ்லிங்களுக்கு எதிராக கிளர்ந்தெழும்ப எத்தனிக்கும் இவ்வேளையில் இலங்கை முஸ்லிங்களின்  சார்பிலான சகல அரசியல் தலைமைகளும்  ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும்.  அரசியல் கட்சி பேதங்கள், பிரதேச வாதங்கள் கடந்து சகல அரசியல் பிரமுகர்களும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மேலும் அவ்வறிக்கையில்  தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |