Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் சேவை நலன் பாராட்டு



(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகளில் பல்வேறு பணிகளில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து தன்னலம் கருதாது பணியாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய நிருவாக உத்தியோகஸ்த்தர் , நிதியுதவியாளர் , அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்றோரின் சேவையினைப் பாராட்டி அவர்களை மகிழ்வித்து எதிர்காலப் பணியாளர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தில் அவர்கள் ஆற்றிய அரிய பெரிய சேவையினை தெரியப்படுத்துமுகாமாக சேவை நலன் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு.எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் ஓய்வு நிலைப் பணியாளர்களை விழித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஓய்வு நிலைப் பணியாளர்களைப் பாராட்டி கவிதைகள், விசேட உரைகள் என்பன இடம் பெற்றன.






































Post a Comment

0 Comments