Advertisement

Responsive Advertisement

சஜித்துடன் இணைந்து களமிறங்கும் முக்கிய கட்சிகள்! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்தக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக பயணிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை உருவாக்கும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கமொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு பங்களிப்புச் செய்வோம்.
பொய் மற்றும் தவறான பிரசாரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து முற்போக்கான வலுவான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments