மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
|
இது குறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், நேற்றிரவு சுமார் எட்டு மணியளவில் இந்த வழிப்பிள்ளையார் முன்றலில் நாம் நின்று விட்டு இறுதியாக சென்றோம். எனவே இந்த சம்பவம் நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. இந்த வழிப்பிள்ளையார் சிலை அமைப்பதற்காக யுத்த காலத்திற்கு முன்னிருந்து அந்த இடத்தை துப்புரவு செய்து வந்தோம்.
அதன் பின்னரே சிலையை அங்கு அமைத்தோம். அப்போது எதிர்ப்புக்கள் வந்திருந்தன. இந்த சிலையை உடைத்த விசமிகள் யாராக இருந்தாலும் இவ்வாறான மோசமான நடவடிக்கையில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
![]() ![]() ![]() |
0 Comments