Advertisement

Responsive Advertisement

அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்

( அஸ்ஹர் இப்றாஹம்)

அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமை ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்ட நடைபெற்றது.
இதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் அதிகளவான இளைஞர் யுவதிகள் வேட்புமனுக்களை  தாக்கல் செய்தமையை அவதானிக்க முடிந்தது.
 வேட்புமனு தாக்கல் செய்திருந்த 74 வேட்பாளர்களுள் 71 வேட்பாளர்களன் வேட்பு மனுக்கள்  ஏற்றுக் கொள்ளபபட்டதுடன் 3 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் 2020ம்ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்திற்காக பிரதேச செயகத்திலிருந்தும் 334பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அதனைத் தவிரவும் உயர் கல்வி மற்றும் பிற துறைகள் சார்ந்த பிரதிநிதிகள் இருபத்திரண்டுபேர்கள் பிறிதொருதினத்தில் தேர்தல் மூலமாக 22பேர் தெரிவுசெய்யப்படுவர்.

மொத்தம் 356பிரதிநிதிகள் இப்பாரளுமன்றத்தைபிரதிநிதித்துவப் படுத்துவர். இதில் ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள் எனமுக்கிய துறைகளுக்கான அமைச்சுப் பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டோர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments