Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குரு மகுட விருது : ஏழு துறையை சேர்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்



நூருல் ஹுதா உமர்.

குரு ஊடக வலையமைப்பின் இணையதள அங்குரார்ப்பன நிகழ்வும், ரீ- சேர்ட் அறிமுகமும் ஆளுமைகளுக்கான குரு மகுடம் விருது வழங்கும் நிகழ்வும் மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நேற்று மாலை (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமூக வலைத்தள போக்குகளும் அதன் எதிர்கால திட்டங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என  அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ மஜீட், லக்ஸ்டோ அமைப்பின் தலைவர் ஏ.எல்.அன்ஸார், வியூகம் பணிப்பாளர் எஸ்.ஜனூஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் எதிர்கால இலங்கையின் நிலையும் பற்றிய பிரதம உரையை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் நிகழ்த்தினார்.


இந்நிகழ்வில் ஊடகம், கலை, இலக்கியம், குறும்படம், அரசியல் ஆய்வு, என பல்துறை ஆளுமைகள் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


குரு ரீவி பணிப்பாளர் ஹிசாம் ஏ. பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர்,அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவர் சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக், சிலோன் மீடியா போரத்தின் முக்கிய உறுப்பினர்கள்,  ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர். 
 
UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564

Post a Comment

0 Comments