Advertisement

Responsive Advertisement

மனைவியை தீவைத்துக் கொளுத்திய கணவன்!

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் தாபரிப்பு பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட குடும்ப மோதலில், மனைவி மீது கணவன் பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

சாய்ந்தமருது, 6 ரீ.எம் வீதி பகுதியில் நேற்று அதிகாலை பெற்றோலுடன் திடீரென வீட்டினுள் உட்புகுந்த நபர் ஒருவர் அங்கு உறங்கிய பெண்ணை அழைத்து அவர் மீது பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார்.இதன் காரணமாக படுகாயமடைந்த குறித்த பெண் கல்முனை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலினை மேற்கொண்ட நபரும் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணும், தாக்குதலினை மேற்கொண்ட நபரும் தம்பதிகள் எனவும் 7 பிள்ளைகளை கொண்ட இத்தம்பதியினர், ஒரு வருடத்திற்கு முன்னர் விவாகரத்து செய்த பின்னர் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகளை தொடர்ந்து தாபரிப்பு பணம் செலுத்திய விடயம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments