Advertisement

Responsive Advertisement

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது! மாணவன் வைத்தியசாலையில்

பகிடிவதையில் ஈடுபட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைபாட்டிற்கு அமைய, பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிக்கா விஜேரத்ன தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் உணவகத்திற்குள் நேற்று மாலை, பகிடிவதையில் ஈடுபட்டதையடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இம்மோதலின் போது காயமடைந்த மாணவரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு பரீட்சை எழுதத் தடை விதிக்கப்படும் என்று அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments