வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான எம்.எம்.ரதன்
மேலும் குறித்த ஆசிரியரை விடுவிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதன் மற்றும் முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் ஆகியோர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வந்ததாக இணையதளங்களிலும்,சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இச் செய்திகளின் எதிரொலியாக வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியினர் குறித்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதை அடுத்து தமிழரசுக் கட்சியிலிருந்து குறித்த ஆசிரியரை இடைநிறுத்தியுள்ளதாக தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளை தலைவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இருந்தும் எதுவித ஆதாரங்கள் இல்லாமல் குறித்த ஆசிரியர் மீது வீண் பழி போடுகின்றார்கள் என தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் முகனூலில் பிரச்சாரம் செய்து வந்ததை தொடர்ந்து அடுக்கடுக்காக குறித்த ஆசிரியருக்கு எதிரான ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
0 Comments