சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் வாழும் சீனப் பிரஜைகள் இலங்கைக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஏனைய மாகாணங்களில் இருந்து இலங்கை வரும் சீன ஊழியர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்பட்ட காலத்தை கழிக்க வழி வகுக்க வேண்டும் என அறிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அந்த நகரத்திற்கு செல்லவும் அங்கிருந்து வெளியில் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் அவர்களின் இருப்பிடங்களில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் சீனா கூறியுள்ளது.
0 comments: