Home » » பசறையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - பலர் காயம்

பசறையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - பலர் காயம்


புதிய இணைப்பு
பதுளை, பசறை பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 20இற்கும் மேற்பட்டோர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




முதலாம் இணைப்பு
பதுளை, பசறை பகுதியில் சற்று முன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
பதுளை பசறை மடுல்சீமை பிரதான சாலையில் 6 வது மைல் போஸ்டில் பயணிகள் பேருந்து ஒரு செங்குத்துப்பாதையில் விழுந்ததிலேயே இவ்வாறான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
500 அடி பள்ளத்தில் பேருந்து பாய்ந்ததால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.









மேலதிக தகவல்கள் - திருமாள்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |