Advertisement

Responsive Advertisement

175 கி.மீ. வேகத்தில் பந்துவீசிய இலங்கையின் மதீஷ பத்திரண

இந்தியாவுக்கு எதிராக ப்ளூம்பொன்டெய்னில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது இலங்கையின் இளம் வீரர் மதீஷ பத்திரண மணிக்கு 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடியபோது நான்காவது ஓவரின் கடைசிப் பந்தை மதீஷ பத்திரண இடப்புறமாக ஷோர்ட் பிச்சாக வீசினார். அப் பந்து மணிக்கு 175 கிலோ மீற்றர் வேகம் கொண்டதாக வேக அளவுமாணியில் பதிவானது.
இந்திய ஆரம்ப வீரர் யஷாஸ்வி ஜய்ஸ்வாலுக்கு வீசப்பட்ட அப் பந்து வைட் ஆக மத்தியஸ்தரால் அறிவிக்கப்பட்டது.

வேக அளவுமாணியில் மதீஷ பத்திரணவின் பந்துவீச்சு 175 கிலோ மீற்றர் வேகத்தில் பதிவானபோது அனைவரும் பிரமித்துப்போயினர்.
இதேவேளை, வேக அளவுமாணியில் தவறாகப் பதிவானதா என்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடமிருந்து விடுக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments