Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி!

தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரியை அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்னதாக சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த தவணையில் அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார். இதன்போது அவரை மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் வெறும் நாடகம் என்றும். அது அரசாங்கத்துக்கு சிக்கல்களை ஏற்படுத்துவதற்காக இந்த சதி வேலை செய்யப்பட்டதாக அரசாங்க உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments