Home » » எனக்கு தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும்-கருணா அம்மான்

எனக்கு தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும்-கருணா அம்மான்

பாறுக் ஷிஹான்
 எனக்கு தெரியும்தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  பொத்துவில், கோமாரி, ஊரணி ,பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெள்ளிக்கிழமை(13) மாலை 5 மணி முதல் 8 மணிவரை  இடம்பெற்ற  கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில்

தமிழ்  மக்களுக்கு அரசியல் தெளிவு  வேண்டும்.கடந்த  சனாதிபதித்தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்குவிடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம். மூழ்கப் போகும் கப்பலில்பயணிக்க வேண்டாம் ஓடும் கப்பலிலே பயணிக்கவேண்டும் என மேடைகளில் உரக்கக்கூறினோம் . அது பற்றிய தெளிவுஅப்போது தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.சனாதிபதி கோட்டாபயவின்  வெற்றியின்பின்னர் தமிழ் மக்கள் உணரத்தொடங்கி இருக்கிறார்கள் . இது ஒரு நல்லவிடையம்.  நாம்வெற்றியின் பங்காளராக இருக்கும் போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளஅரசிடம் வாதிடும் சக்தியாக மாறமுடியும்.

சஜித் பிரேமதாச அவருடன் இருந்தவர்கள் துவேஷம்பிடித்த முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் தமிழ் மக்களைகாடேற்ற முற்பட்டனர். இனவாதம் பிடித்த முஸ்லிம்தலைவர்கள் இருந்த இடத்திலே தமிழ்தலைமைகளும் இருந்து கொண்டு ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்கள் என்று இன்னும் எனக்குபுரியவில்லை .இது ஒரு வரலாற்றுப்பிழை  இந்தவரலாற்றுப் பிழைகளை இனிவரும் காலங்களிலும்நாம் விட்டு விடக்கூடாது.

கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவுஅனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒரு துரோகச் செயல்.வடக்குகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் , காளிகோயிலை இடித்து பள்ளிவாசல் கட்டினேன்என்று திமிராகப் பேசிய முஸ்லிம் தலைவர்கள்எப்போது அடங்கிப் போய் இருக்கிறார்கள். அப்பாவிமுஸ்லிம்  மக்களுக்கும்எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும்இல்லை.கடந்த ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சிக்காலம்தமிழர்களுக்கு கிடைத்த சாபக்கேடு.  அவரை ஆட்சி அதிகாரத்தைகொண்டுவந்தவர்கள் தமிழ் மக்கள் .அவர்தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லைமாறாக துரோகத்தை மாத்திரமே செய்தார் அவரால் ஒரு அரசியல்கைதிகள் கூட வெளியில் விடமுடியவில்லை . 

இன்று கோட்டபாய ராஜபக்சஜனாதிபதியாக வந்தவுடன் அரசியல் கைதிகளை விடுவித்துவருகிறார்.நான் ஏன் தமிழர்  ஐக்கிய  சுதந்திர முன்னணிஎன்ற கட்சியை உருவாக்கினார் என்றால் எனக்கு தெரியும்தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் . ஏனெனில் அது ஒருஆணித்தரமான கட்சி அல்ல .அதுஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியும்அல்ல  அவர்கள்பதிவு செய்யப் போவதுமில்லை .தமிழரசு கட்சியின் கீழ் தான்  ஒன்றாகஇருக்கின்றனர்.அவர்களின்உடைவை நிமிர்த்த கூடிய கட்சி தேவைஎன்பதால்தான் தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணியை உருவாக்கி தமிழர் எங்கெல்லாம் வசிக்கிறார்கள்குறிப்பாக வடக்கு கிழக்கில் பயணம்செய்து கட்சியை பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு குறித்தும் தெளிவுபடுத்திவருகிறோம்.

குறிப்பாகஅம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வேறு ஒரு வியூகத்தைவகுக்க வேண்டும். தேசியக் கட்சியுடன் சேர்ந்துபாராளுமன்றத் தேர்தலில் நாம்  களம்  இறங்குவோமானால் ஒரு ஆசனத்தைகூட பெறமுடியாது  ஏனெனில்தேசிய கட்சியில் முஸ்லிம்கள் இடம்பெற்றிருப்பார்கள். தமிழர்களின் வாக்கும் அவர்களுக்கே செல்லும்இதன்னால் அந்த ஆசனம்சென்றடையும் இது ஒரு சனநாயகமரபு.அம்பாறையில்இருக்கிண்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருபொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போதுஇரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைபெறமுடியும். வெல்லவைத்து தருவது உங்கள் கடமைநீங்கள் வெல்ல  வைப்பவரை  நான் அமைச்சராக்குவேன். 

மட்டக்களப்புமாவட்டத்திற்கு  அமைச்சுப்பதவியின் தேவையை விட அம்பாறை மாவட்டத்திற்கு மிகமுக்கியமானது.இந்த பொத்துவில் மண்ணானது கஸ்ட்ரோ ,டேவிட், தோமஸ் ,ரஞ்சன்போன்ற பல தளபதிகளை இந்தபோராட்டத்திற்காக பல தந்தது. ரஞ்சன்என்ற மாவீரரும் நானும் ஒரே காலத்தில் பயிற்சியை பெற்றவர்கள் என நினைவை பகிர்ந்துகொண்டார். இந்த யுத்தத்தை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்குஇருக்கின்றது அதை பலர்  விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி நான் கவனத்தில் எடுப்பதில்லைஏனெனில் கருணா அம்மான் போராட்டத்தில்இன்றும் இருந்திருந்தால் இங்கு ஒரு இளைஞர்களும்வந்திருக்க மாட்டார்கள் அனைவரும் போராட்டத்தில் அழிந்திருப்பார்கள் இது எல்லோருக்கும் இழப்புதான் என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |