Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக் உட்பட்ட 124 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக் உட்பட்ட 124 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 124 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 இடங்களில் இடம்பெற்றது.
கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூகநிலையம் ஆகியன இணைந்து நடத்தும் வன்னி மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூகநிலையம் ஆகியன இணைந்து விதையனைத்தும் விருட்சமே என்கின்ற செயற்றிட்டத்தின் ஊடாக அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு ஒன்றினை செயற்படுத்தி அதன்மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தின் ஊடாக கிளிநொச்சி முல்லைத்தீவு மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 124 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 இடங்களில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.அந்தவகையில் இன்று காலை ஏறாவூர் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வைத்து 21 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாவளையாறு கைலன் வித்தியாலயத்தில் வைத்து 47 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், கரடியன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து 26 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், குழுவினாமடு விநாயகர் வித்தியாலயத்தில் வைத்து 13 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், கச்சைக்கொடி சுவாமிமலை வித்தியாலயத்தில் வைத்து 17 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுமாக மொத்தமாக 124 பேருக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.

விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உடைய தென்மராட்சிப் பிரதேச இணைப்பாளர் சி. சிவகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் கரடியன்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர மேயர் திரு தி.சரவணபவன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டதோடு ஏனைய இடங்களில் கருகம்பனை இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமுக நிலையம் ஆகியவற்றின் உடைய உறுப்பினர்கள் மட்டக்களப்பு சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |