Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பின் தாக்கம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் கடந்த நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் பதினைந்தாம் திகதி வரையான காலப்பகுதியில் 91 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 1419 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடுசென்றுள்ளனர்.
இதில் இருவர் இந்த மாதமளவில் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் செங்கலடியில் 18 பேர், ஆரையம்பதியில் 10 பேர், வெல்லாவெளியில் 06 பேர் மற்றும் வாழைச்சேனை, வவுணதீவில் தலா 5 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
மொத்தமாக கடந்த வாரம் 91 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் என்பவற்றை அகற்றி சுத்தமான சூழலை பேண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments