Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோத்தபாயவை சந்தித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில்! அடுத்த பிரதமர் யார்?


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் தமது பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்.
இதனையடுத்து பொதுத்தேர்தல் நடத்தப்படும் வரை 15பேரைக்கொண்ட காபந்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் புதிய அமைச்சரவையை அமைக்கும் வகையில் தாம் ராஜினாமா செய்வதாக ரணில் அறிவித்திருந்தார்.
அத்துடன் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல தயார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று ஜனாதிபதி கோத்தபாயவை சந்தித்ததன் பின்னரே ரணில் இந்த முடிவை எடுத்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அடுத்த பிரதமர் யார் என்னும் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் மகிந்த தரப்பினர் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments